பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2013

மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடுகளே காரணம்: முதல்வர் ராமன் சிங் ஒப்புதல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரசார் நடத்திய யாத்திரையின் போது மறைந்து இருந்த மாவோயிஸ்டு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்
காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மகேந்திர கர்மா உள்பட 27 பேரை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றனர். இது குறித்து அம்மாநில முதல் அமைச்சர் ராமன் சிங் பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் யாத்திரைக்கு தேவையான பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சரியானதல்ல. அவர்கள் நடத்திய யாத்திரைக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்தது. ஆனால், நிச்சயம் அங்கே சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்து இருக்கின்றன என்பதை ஒத்துக்கொள்கிறேன். 

இதற்கு பொறுப்பானவர்களை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இந்த பாதுகாப்பு குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

சம்பவம் நடந்த பகுதி யுத்தபூமியல்ல. எனவே சத்தீஸ்கர் மாநிலத்தில் இயங்கி வரும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் ஏற்கமாட்டோம். 

இவ்வாறு அவர் பேசினார்.