பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2013

4 மாணவர்கள் கடலில் மூழ்கி பலியான விவகாரம் :
மதுரை பள்ளி முதல்வர் கைது
கடலில் மூழ்கி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த வழக்கில் பள்ளி முதல்வர் உட்பட 3 பேர்  கைது செய்யப் பட்டனர்.   



மதுரை திருநகர் சி.எஸ்.ராமாச்சாரி பள்ளியை சேர்ந்த பள்ளி முதல்வர் மாறன் கைது செய்யப்பட்டார்.  கணினி ஆசிரியர் கார்த்திகேயன், பொருளாதார ஆசிரிய ஹரிக்குமாரும் கைது செய்யப்பட்டார்.
ஜூலை 12ம் தேதி அன்று பள்ளி சுற்றுலாவின் போது கடலில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.   மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி சுற்றுலா சென்றதாக பள்ளி மீது குற்றச்சாட்டு எழுந்தது.   இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.