பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2013

சுவிட்சர்லாந்து பிறெம்கார்ட்டன் நகரில் பொது இடங்களில் அகதிகள் நடமாட தடை

சுவிட்சர்லாந்தின்  Aargau  மாநிலத்தில் பிறெம்கார்ட்டன்  (Bremgarten) என்ற சிறுநகரத்தில் உள்ள முக்கிய இடங்கள் சிலவற்றிற்கு அகதிகள் செல்லமுடியாதவாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது வெளிப்படையான தீண்டாமை நடவடிக்கை என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
சூரிச் நகரத்திலிருந்து 20 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள பிறெம்கார்ட்டன் நகரத்தில் புதிதாக அகதி முகாம் ஒன்று அமைக்கப்பட்டதை அடுத்து அந்த நகர நிர்வாகம் அங்குள்ள பாடசாலைகள், நீச்சல் குளங்கள் ,மற்றும் விளையாட்டு இடங்களுக்கு பொது நூலகம் ஆகிய இடங்களுக்கு அகதிகள் செல்வதற்கு தடைவிதித்துள்ளது.
இந்த நடவடிக்கை அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் வெளிப்படையான தீண்டாமை நடவடிக்கை என்றும் மனித உரிமை அமைப்புக்களும் சுவீஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த பிறெம்கார்ட்டன் நகர முதல்வர் ரொய்மொண்ட ரெல்லன்பொச் அகதிகளின் பாதுகாப்பு கருதியே இந்த முடிவு எடுகக்ப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அகதிகளுக்கும் நகரவாசிகளுக்கும் இடையில் மோதல் வராமல் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
சுவிஸ் சமஷ்டி கூட்டமைபில் அகதிகள் விவகார பணிமனை இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. நகரவாசிகளுக்கு அகதிகளுக்கும் இடையில் சுமூக நிலையை பேணுவற்கு இந்த நடவடக்கை அவசியம் என்று அந்தப்பணிமனை குறிப்பிட்டுள்ளது.
ஆனால் சுவிஸ் போன்ற உயரி கலாச்சாரம் கொண்ட ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட மக்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லவிடாமல் தடுப்பது அப்பட்டமான இனவாத மற்றும் தீண்டாமை செயற்பாடு என்றும் இது மக்களை அனைத்து இடங்களுக்கும் செல்லக் கூடியவர்கள்-செல்லமுடியாதவர்கள் என்ற இரண்டு பிரிவாக பிரிக்கிறது என்று சோசலிசக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வியா ஸ்ஷேன்கர் குற்றம் சாட்டியுள்ளார்tinakathir