பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2013

விக்கினேஸ்வரனின் பதவிப் பிரமாண நிகழ்வில் குர்சித் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்

முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் நாளைய தினம் வடமாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார். இதன் போது விசேட விருந்தினராக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் கலந்துக் கொள்வார் என்று தமிழ் தேசியகூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் வடமாகாண சபைக்கான அமைச்சர்கள் குறித்த இறுதி தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் எடுக்கவில்லை.

சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவி ஏற்றதன் பின்னரே, இது குறித்து தீர்மானிக்கப்படும் என்று நேற்றைய தினம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் அமைச்சர் தெரிவின் போது புத்திஜீவிகளுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்படும் என்று, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.