பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2013

காமன்வெல்த்தில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டதை கண்டித்தும்,
இலங்கை தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த இசைப்பிரியா என்ற பெண்ணை சிங்கள இராணுவத்தினர் மனசாட்சியே இல்லாமல் கற்பழித்து, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட் டதை கண்டித்தும்,


இந்திய அரசு இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்குவதை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் நாளை (புதன்கிழமை) காலை நெல்லை சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது’’என்று கூறியுள்ளார்.