வவுனியா சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் |
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வழங்குங்கள் என கோரி ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.
வடமாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை வலையமைப்பு மற்றும் சமூகமட்ட அமைப்புக்களும் இணைந்து பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி வவுனியாவில் ஊர்வலமொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
வவுனியா தபாலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த ஊர்வலத்தில் சிறுவர்கள், பெரியவர் என பலரும் கலந்துகொண்டு வவுனியா மாவட்ட செயலகம் வரை ஆர்ப்பாட்டமாக சென்று வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ச.மோகநாதனிடம் மகஜரொன்றினை கையளித்திருந்தனர்.
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எனது ஆட்சியில் மன்னிப்பே கிடையாது என்ற ஜனாதிபதியின் வாக்குறுதியை மையப்படுத்தி அட்டம்பஸ்கட சிறுவர் இல்லத்தில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்களுக்கு நிதி கிடைக்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கப்படவேண்டும். இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடையூறு விழைவித்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியவர்கள் இனி அவ்வாறு செயற்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
|
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼