பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2014

சிறிலங்காவில் அனைத்தும் இராணுவ மயமாகிவிட்டது – கேணல் ஹரிகரன்

சிறிலங்காவில் தற்போது அனைத்துமே இராணுவ மயமாகி விட்டதாக கருத்து வெளியிட்டுள்ளார், இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன். 

சென்னை, அடையாறில் உள்ள இந்திய- தெற்காசிய ஆய்வு மையத்தில் நேற்றுமுன்தினம் மாலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் உரை இடம்பெற்றது.

முன்னதாக, இரா.சம்பந்தனை அறிமுகப்படுத்தி, கேணல் ஆர்.ஹரிகரன், உரையாற்றினார்.

இதன்போதே அவர், தற்போது சிறிலங்காவில், அனைத்தும் இராணுவ மயமாகி விட்டதாக குறிப்பிட்டார்.

இதன்காரணமாக, போர்க்குற்றங்களுக்காக அனைத்துலக விசாரணை நடத்தும் நிலை வந்தாலும், அதற்கு சிறிலங்கா அரசாங்கம் எந்தளவுக்கு ஒத்துழைக்கும் என்பது சந்தேகம் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.