பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2014

ஜெனீவா தீர்மானம் குறித்து அமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவுள்ளது.

அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ரெஜினோல்ட் குரே, ராஜித சேனாரட்ன உள்ளிட்ட அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளனர்.
ஜெனீவா தீர்மானம் குறித்து முன்னாள் ராஜதந்திரிகளான தமரா குணநாயகம், தயான் ஜயதிலக்க போன்றோர்களும் அமைச்சர்களுக்கு விளக்கியுள்ளனர்.
ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து விளக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.