பக்கங்கள்

பக்கங்கள்

18 மார்., 2014

சிங்களவர்களின் மதவெறியால், இலங்கைக்கு பாரிய நெருக்கடி. டெலிகிராப்பத்திரிக்கை 
இலங்கையிலுள்ள சிங்கள பௌத்த மதவெறிப்பிடித்தவர்களாலேயே, நாட்டுக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதாக த கொழும்பு டெலிகிராப் குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள பௌத்தர்களில் பெரும்பாலானோர் தற்போது மதவெறிப்பிடித்து ஆடுகின்றனர். அவர்களிடம் ஒழுங்கான கட்டுப்பாடு இல்லை.
புத்தரின் போதனைகளை அவர்கள் பின்பற்றுவதில்லை.
பௌத்தர்களே ஏனையவர்களை விட பெரியவர்கள் என்று கருதப்பட வேண்டும் என்ற வெறி அவர்களிடம் காணப்படுகிறது.
இதன் விளைவாகவே இலங்கையில் அனைத்து பிரச்சினைகளும் ஏற்பட்டு, தற்போது வெளிநாட்டின் அழுத்தங்களும் அதிகரித்துள்ளன என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.