பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2014

ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவிக்கக்கோரிய லெக்ஸ் நிறுவனத்தின் மனு தள்ளுபடி
 ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்ககோரி லெக்ஸ் நிறுவனம் 2-வது முறையாக தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 



பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது லெக்ஸ் பிராப்பர்டிஸ் நிறுவனத்தின் 2-வது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹா  ஏற்கனவே விதிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் அபராதத்தை உடனடியாக செலுத்த உத்தரவிட்டார்.


இதை அடுத்து அந்நிறுவனம் அபாரத தொகையை நீதிமன்றத்தில் செலுத்தியது. தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய மற்றொரு நிறுவனமான மெடோ அக்ரோபாஃபார்ம் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பை வரும் 26-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
2005-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கு தொடங்கிய நிலையில் 9 ஆண்டுகளுக்கு பின் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தற்போது கோரிக்கை வைத்திருப்பது ஏன் என்று லெக்ஸ் பிராப்பர்டிஸ் மற்றும் மெடோ அக்ரோபாஃபார்ம் நிறுவனங்களிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதன் பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதி வாதத்தை அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் தொடர்ந்தார்.