பக்கங்கள்

பக்கங்கள்

15 ஏப்., 2014

யாழ் கலட்டியில் குடைசாய்ந்தது தேர்; புத்தாண்டில் சோகம் 
யாழ்ப்பாணம் கலட்டிப்பிள்ளையார் ஆலயத்தின் தேர்திருவிழா சற்றுமுன்னர் இடம்பெற்றது. அதில் தேர் இழுத்துவரும்  போது தேர்குடை சாய்ந்தது.


இதில் பக்தர்கள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆலயத்தின் பிரதம குரு படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று வருடப்பிறப்பு தினத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.