பக்கங்கள்

பக்கங்கள்

31 மே, 2014

மகனுக்காக அடித்த சதம்: உருக்கத்தில் ஷேவாக்
சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் எனது அதிரடி ஆட்டத்திற்கு, நான் என் மகனுக்கு செய்து கொடுத்த வாக்குறுதி தான் காரணம் என்று ஷேவாக் கூறியுள்ளார்.
நேற்று நடந்த 2வது தகுதி ஆட்டத்தில் புயலாய் மாறிய பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் ஷேவாக் சென்னை அணியின் பந்து வீச்சுகளை புரட்டி எடுத்தார். இவர் 58 பந்தில் 12 பவுண்டரி, 8 சிக்சருடன் 122 ஓட்டங்கள் எடுத்தார். இந்த போட்டித் தொடரில் இது 2வது சதமாகும்.
இவரது அதிரடி மூலம் பஞ்சாப் அணி சென்னை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இது பற்றி ஷேவாக் கூறுகையில், நான் ஓட்டங்கள் எடுக்காமல் மோசமாக விளையாடுவதால் எனது மகனை அவனது சக மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
அதனால் நான் அவனிடம் சிறப்பாக விளையாடி ஓட்டங்கள் குவிப்பேன் என்று உறுதியளித்தேன். அதன்படி அதிரடியாக விளையாடி ஓட்டங்கள் குவித்தேன். மேலும் எனது ஆட்டம் மூலம் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.