பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2014

கோவையில் தனக்கு நெருங்கிய நண்பர் இருப்பதாகவும், அவர் தனக்கு பல்வேறு உதவிகள் செய்ததாகவும் ஜாகீர் உசேன் 
பாகிஸ்தான் உளவாளியான இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேனை 3 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதன் பேரில், சென்னையில் இரகசிய இடத்தில் வைத்து பொலிஸார் விசாரித்து வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் ஜாகீர் உசேன் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறியதாக தெரிகிறது.
அதன்பேரில் கோவையில் தனக்கு நெருங்கிய நண்பர் இருப்பதாகவும், அவர் தனக்கு பல்வேறு உதவிகள் செய்ததாகவும் ஜாகீர் உசேன் கூறியுள்ளார்.
இதனையடுத்து ஜாகீர் உசேன் கூறிய அவரது நண்பர் யார்? எந்த மாதிரியான உதவிகளை அவர் ஜாகீர் உசேனுக்கு செய்தார்? என்று துருவி துருவி விசாரித்து வருகிறார்கள்.
ஜாகீர் உசேனை கோவைக்கு அழைத்து வந்து விசாரிக்கவும் கியூ பிரிவு பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
ஜாகீர் உசேன் கோவைக்கு அழைத்து வரப்படும் தகவல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள நண்பர் ஜாகீர் உசேனுடன் சேர்ந்து நாசவேலைக்கு திட்டம் தீட்டினாரா? என்பது குறித்து விசாரிக்க கியூ பிரிவு பொலிஸார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.