பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2014

இலங்கை மீனவர்கள் 85 பேர் விடுதலை 
 இந்தியாவின் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது. 

 
85 மீனவர்கள் இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய பகுதி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 
 
இந்தநிலையில் இவர்களை விடுவிக்கும் செய்தி நேற்று பிரதமர் மோடியை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
ஏற்கனவே இந்தியாவுக்கு செல்லும் முன்னர் இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கும் உத்தரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.