பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2014


வேலை தேடி சென்ற பெண் ஓடும் காரில் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்
மும்பை தானே பயந்தரில் வசித்து வரும் 29 வயது பெண் ஒருவர் வேலைக்காக இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளியன்று
மர்ம நபர் செல்போனில் தொடர்பு கொண்டார். அவர் அந்த பெண்ணுக்கு வேலை தருவதாகவும், பயந்தர் ரெயில் நிலையத்திற்கு வந்தால் தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து செல்வதாகவும் கூறினார்.

இதையடுத்து அந்த பெண் ரெயில்நிலையம் சென்றார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரை அலுவலகத்திற்கு அழைத்து செல்வதாக கூறி காரில் ஏற்றிக் கொண்டனர்.
கார் பாதி தூரம் சென்றதும் துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை மிரட்டி காரிலேயே அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் 2 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் பயந்தர் ரெயில் நிலையத்திலேயே அந்த பெண்ணை இறக்கிவிட்டு சென்றனர். 
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் நாவ்கர் போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் இது தொடர்பாக மர்ம நபர்கள் இருவரை தேடி வருகின்றனர்.