பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2014

81 கிலோ கஞ்சாப் பொதிகள் பண்டத்தரிப்பில் மீட்பு 
பண்டத்தரிப்பு பகுதியில் கார் ஒன்றில் இருந்து 81 கிலோ 400 கிராம் கேரளக் கஞ்சாவினை இளவாலை பொலிஸார் மீட்டுள்ளனர். 
 
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் எடுத்து வரப்பட்ட நிலையில் இளவாலைப் பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. 
 
இந்தியாவில் இருந்து கொழும்புக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஞ்சுள தலைமையிலான விசேட குழுவினர் நேற்று மாலை 5.30 மணியளவில் குறித்த நபர்களை கைது செய்ததுடன் கஞ்சா பொதிகளையும் மீட்டுள்ளனர்.