பக்கங்கள்

பக்கங்கள்

20 நவ., 2014

சுவிஸ் தூதுவர் வடக்கு ஆளுநரை சந்தித்தார்
சுவிஸர்லாந்து தூதுவர் ஹெயின்ஸ் நெடர்கோன் இன்று வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
சுவிஸர்லாந்து தூதுவருக்கும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.
வடக்கில் மீள்குடியேற்றம், கண்ணி வெடி அகற்றல், பொருளாதார அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து இதன் போது பேசப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் சுவிஸ் தூதரக அதிகாரிகளும் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.