பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2015

ஒருதலைக்காதல் 9-ம் வகுப்பு மாணவி 22 இடங்களில் குத்திக்கொலை; வாலிபர் தற்கொலை முயற்சி

ஒருதலைக்காதல் 9-ம் வகுப்பு மாணவி 22 இடங்களில் குத்திக்கொலை; வாலிபர் தற்கொலை முயற்சி

கரூர் மாவட்டம் க.பரமத்தியை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகள் பாரதபிரியா (வயது 14). ஈஸ்வரன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் சின்னதாராபுரம் அருகே ரெங்கபாளையத்தில் உள்ள பாட்டி வீட்டில் பாரதபிரியா தங்கியிருந்து சின்னதாராபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.தினமும் பாட்டி வீட்டில் இருந்து பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருவது வழக்கம். இன்று காலை வழக்கம்போல் பாரத பிரியா சென்றார். வழியில் அவரை மறித்த மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி னார்.

இதில் அலறியடி கீழே சாய்ந்த பாரதபிரியாவை வெறித்தனமாக அந்த வாலிபர் 22 இடங்களில் குத்தினார். பின்னர் தானும் கத்தியால் தன்னைத்தானே குத்திக் கொண்டார். இருவரும் அந்த இடத்திலேயே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள்.அப்போது அந்த வழியாக பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் இதைக் கண்டு அலறினார்கள். மேலும் அக்கம்பக்கத்தினரும் திரண்டு வந்து பாரதபிரியா மற்றும் வாலிபரை மீட்டு கரூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாரதபிரியா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த வாலிபருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இதுபற்றி சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதபிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர்.பின்னர் சம்பவம் குறித்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் கொலையுண்ட மாணவி பாரத பிரியாவின் வீட்டருகில் பாட்டி வீட்டில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்த வாலிபர் மனோஜ் என்றும், இவர் கடந்த ஓராண்டாக ஒருதலையாக பாரதபிரியாவை காதலித்து வந்துள்ளார். தன்னை காதலிக் கும்படியும் அவர் வற்புறுத்தி வந்துள்ளார்.
இதற்கு பாரதபிரியா தொடர்ந்து மறுத்து வந்துள் ளார். இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு சென்ற பாரதபிரியாவை வழி மறித்து மீண்டும் தன்னை காத லிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு திட்டவட்டமாக பாரதபிரியா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ் நடுரோட்டில் பாரதபிரியாவை கத்தியால் குத்தி கொன்றது தெரிய வந்தது.