பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2015

தேர்தலில் வெற்றி பெறுபவர் முதலில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: பா.ஜ.க

இலங்கையில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெறுபவர் தமிழர் பிரச்சினைக்கு முதலில் தீர்வைக் காணமுன் வரவேண்டும் என்று இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதாக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவர் விஜய் ஜொலி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் முதலில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வை காண வேண்டும்.
இந்தநிலையில் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்சவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் ஜொலி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையின் ஜனநாயகத்துக்காக சமாதானமான நீதியான தேர்தல் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும்.
அத்துடன் தமிழர்கள் விடயத்தில் எஞ்சியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டு இறுதி சமாதானம் எட்டப்பட வேண்டும் என்றும் ஜொலி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.