பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2015

மஹிந்தவிற்கு வாக்களிக்க சொல்லவில்லை!! டக்ளஸ் பல்டி அடித்தார்!

மஹிந்தவிற்கு வாக்களிக்க சொல்லவில்லை. நீங்களே தீர்மானித்து வாக்களியுங்கள். ஆனாலும் எனது சின்னத்தினில் எதிர்வருங்
காலங்களிலேனும் நான் போட்டியிடும் சூழல் உருவாக வேண்டுமென பல்டி அடித்துள்ளார் அரச தரப்பு வடக்கின் பங்காளி அமைச்சர்.
முன்னதாக மஹிந்தவிற்கு வாக்களிக்கச்சொல்லி பகிரங்க பிரச்சாரங்களை செய்துவரும் அவர் பின்னர் தனது முக்கிய ஆதரவாளர்களை மட்டும் தனிப்பட்டதாக அழைத்து மஹிந்தவிற்கு வாக்களிக்க நான் சொல்லவில்லை. நீங்களே தீர்மானித்து வாக்களியுங்கள். ஆனாலும் எனது சின்னத்தினில் எதிர்வருங்காலங்களிலேனும் நான் போட்டியிடும் சூழல் உருவாக வேண்டுமென்பதை மறந்துவிடாதீர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே மஹிந்தவிற்கு ஆதரவு கோரவென அனுப்பி வைத்த சுவரொட்டிகளை ஒட்டாது மறைவிடத்தினில் பதுக்கி வைத்துள்ளமை தொடர்பினில் புலனாய்வு கட்டமைப்பு அறிக்கையொன்றினை சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகின்றது.இதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய மஹிந்தவிடம் இதனை கொண்டு சென்றிருந்ததாகவும் இதனாலேயே இறுதியாக நாளினில் திட்டமிடப்பட்டிருந்த பிரச்சார கூட்டம் பிசுபிசுக்க காரணமென தெரியவருகின்றது.