பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2015

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.., பதினெட்டாம் ஆண்டை வரவேற்கும் முகமாக, “வேரும் விழுதும் - 2015" கலைமாலை.

காலம்: 06.06.2015
நாள்: சனிக்கிழமை.
நேரம்: பி.பகல் 02.30மணி.
விழாநடைபெறும் இடம்:  பேர்ன்
(இவ்வருடம் பேர்ன் மாநிலத்திலும், அடுத்த வருட 2016ம் ஆண்டுக்கான நிகழ்வை சூரிச் மாநிலத்திலும் நடத்துவதெனவும் தீர்மானிக்கப் படுகிறது)

***பக்கச சார்பற்ற அரசியல் கலப்பேதுமின்றி, "உரைகள் உட்பட அனைத்து நிகழ்வுகளும்" அமைதல் வேண்டும். 

***இயல், இசை, நாடகம்... வயதெல்லையற்ற, பிரதேச வேறுபாடின்றி ஆர்வமுள்ள அனைத்துக் கலைஞர்கள்,படைப்பாளிகள் தங்கள் ஆக்கங்களை 20.04.2015 ற்கு முன்னர் அறியத் தாருங்கள். 

**தனிநடனம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. குழுநடனமே ஏற்றுக் கொள்ளப்படும்.
 
**தனி நிகழ்வுகளாக பேச்சு, கவிதை, நகைச்சுவை..

**நேரம், ஒழுங்குவிதிகள் குறித்து நிகழ்ச்சிக் குழுவே முடிவு செய்யும்.

**விழா மலருக்கான ஆக்கங்கள் தர விரும்பும் எமது ஊர் மக்களே! உங்கள் தரமான ஆக்கங்கள், ஆசியுரைகள், வாழ்த்துரைகளையும் மேற்குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் (20.04.2015 ற்கு) தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதற்கு பின்னர் வரும் எந்தவொரு ஆக்கங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

**ஆயகலைகள் எதுவாயினும் திறன்மிக்க எமது ஊரைச் சேர்ந்த சுவிஸில் வாழும் எமது இளையோர்களே! உங்களைப் பாராட்ட விரும்புகின்றோம். மேலே குறிப்பிட்ட திகதிக்கு (20.04.2015 ற்கு) முன்னர் எம்முடன் தொடர்பு கொண்டு உங்கள் விபரங்களை அறியத் தாருங்கள். (நுண்கலை, ஓவியம், சிற்பம், நடனம், கராத்தே, கவிதை, இலக்கியம் இன்னோரன்ன பல…… )

**ஊடக அன்பர்களே! எங்கள் விழாவினை தங்கள் ஊடகங்களில் பிரசுரிக்கும் ஊடகங்களின் பெயர்கள், தங்கள் ஊடகங்களின் இலச்சினையுடன் விழாமலரில் இணைத்துக் கொள்ளப்படும் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம். (இதற்கென உங்கள் ஊடக இலச்சினையுடன், தாங்கள் எமது விளம்பரத்தின் இணைப்பை "லிங்கை" எமக்கு உடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

***நிகழ்ச்சிநிரல்....

06.06.2015 ஆரம்பம் 02.30 மணி..
அமைதிவணக்கம்,
மங்களவிளக்கேற்றல்,
வரவேற்புநடனம்..

*வரவேற்புரை.. 
திருமதி.தமிழ்வாணன். (புருக்டோர்ப் செயற்குழு உறுப்பினர்)
*தலைமைஉரை.. 
திரு. இராசமாணிக்கம் இரவீந்திரன் (தலைவர்) அவர்கள்.
*வாழ்த்துரை.. 
திரு. தருமலிங்கம் தங்கராஜா (செயலாளர்) அவர்கள்.

***கலைநிகழ்ச்சிகள்...
நடனம் (மேலைத்தேய, கீழைத்தேய ),
இளங்கலைஞர்கள் கௌரவிப்பு,
இசை நிகழ்ச்சி (கரோக்கி ),
நாடகம். "ஊரும் உறவும்" 
( நகைச்சுவை கலந்த சமூக நாடகம் -நெறியாள்கை திரு.ச.ரமணதாஸ் -பொருளாளர்-)
மற்றும் தனிநடிப்பு உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள்...

**பிரதம விருந்தினர் உரை..
**சிறப்பு விருந்தினர்கள் உரை... 
(ஏனைய புலம்பெயர் புங்குடுதீவு ஒன்றியங்களின் பிரதிநிதிகள்)
**நன்றியுரை...

(***இந்நிகழ்வுக்கான விழா ஏற்பாட்டுக்குழுவாக திரு.இ.இரவீந்திரன் -தலைவர்-, திரு.த.தங்கராஜா -செயலாளர்-, திரு.சொ.ரஞ்சன் -உபதலைவர்-, திரு.ச.ரமணன் -பொருளாளர்-, திரு.து. சுவேந்திரன் -உபசெயலாளர்- மற்றும் ஆலோசனைசபை உறுப்பினர்களான திரு.செ.சுரேஷ், திரு.அ.நிமலன், திரு.செ.சதா, திரு.ந.ஜெயகுமார், திரு.க.கௌதமன் (சூரிச்), திரு.ச.கிருபா (சூரிச்), திரு.ச.பன்னீர்செல்வம் (சூரிச்), திரு. சு. கிருஸ்ணகுமார் (கிருஸ்ணா) சுமிஸ்வால்ட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர்.) 

அனைவரும் வருக! ஆதரவு தருக!
இவ்வண்ணம்,
விழா ஏற்பாட்டுக்குழு சார்பாக, 
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
 28.02.2015.

தொடர்புகட்கு,
த.தங்கராஜா 079.398 28 19
இ.இரவீந்திரன் 079.218 70 75
சொ.ரஞ்சன்  077.948 52 14
ச.ரமணன் 078.800 59 51
 து. சுவேந்திரன் 076.326 81 10


இவ்வண்ணம்,

த.தங்கராஜா.
செயலாளர்,
புங்குடுதீவுமக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் 
சுவிற்சர்லாந்து.           
28.02.2015.

தகவல்...
சுவிஸ்ரஞ்சன்,
உபதலைவர் &ஊடகப் பொறுப்பாளர்,
புங்குடுதீவுமக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் 
சுவிற்சர்லாந்து.           
28.02.2015.