பக்கங்கள்

பக்கங்கள்

17 ஏப்., 2015

மேலும் 5 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐதராபாத் கோர்ட் உத்தரவு



திருப்பதி அருகே சுட்டுக்கொல்லப்பட்ட மேலும் 5 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் கடந்த 7ஆம் தேதி திருப்பதி அருகே சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக தொழிலாளர்கள் மேலும் 5 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்யுமாறு குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி கல்யாண் சன் குப்தா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

அப்போது திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர அரசின் வழக்கறிஞர், ஐதராபாத் உயர்நீதிமன்ற உத்தரவு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது. திருப்பதியில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை மாலைக்குள் கிடைத்துவிடும் என்பதால், அதனை உடனடியாக தாக்கல் செய்வதாகவும், ஐதராபாத் நிஜாம் மருத்துவக் கல்லூரியில் பிரேதப் பரிசோதனை நிபுணர்கள் இல்லை என்று கூறினார்.

இதனை ஏற்காக நீதிபதிகள், மனுத்தாக்கல் செய்தவர்களின் கோரிக்கையை ஏற்று 5 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டனர். வரும் 20ஆம் தேதிக்குள் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். உஸ்மானிய பல்கலைக்கழக மருத்துவ நிபுணர்கள் மூலம் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். சசிகுமார் மனைவியின் மனுவுக்கு கொடுத்த தீர்ப்பின்படியே சென்னை அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். தமிழக தலைமைச் செயலாளர் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். 6 பேரின் மறுபிரேத பரிசோதனை அறிக்கையை வரும் 20ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.