பக்கங்கள்

பக்கங்கள்

18 மே, 2015

புங்குடுதீவு மாணவி கொலையில் வெளிவரும் காரணங்கள்.

புங்குடுதீவு மாணவி பாலியல் வன்முறையின் பின்னர் கொல்லப்பட்டதற்கு இரண்டு குடும்பங்களிற்கிடையில்
இருந்த முன்பகையே காரணமென பொலிசார் கூறுகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள காமுகர்கள் மூவரையும் உருட்டி, பிரட்டி விசாரித்ததில் இந்த தகவல்களை பெற்றதாக இன்று நீதிமன்றத்தில் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட காமுகர்கள் மூவரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு குடும்பங்களிற்குமிடையில் இருந்த முன்பகை காரணமாகவே இந்த கொலை நடந்ததாக பொலிசார் இன்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்தனர். கைது செய்யப்பட்ட காமுகர்கள் மூவருமே சகோதரர்கள் ஆவர். இதில் ஒருவன் கொழும்பில் வேலை செய்து வந்திருக்கிறான்.
இந்த காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றுவதற்காக அங்கு விடுமுறை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறான்.
இந்த காமுகர்களின் குடும்பமும் கொல்லப்பட்ட மாணவியின் குடும்பமும் உறவுக்காரர்கள் என்றும், பலநாள் நீடித்த பகை இந்த கொலையில் முடிந்துள்ளதாக கூறினார்கள்.