பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2015

முற்றுகைக்குள் வி.ரி.தமிழ்மாறன்! விடுவிக்க மக்கள் பேரம்!!

Arul Venthan-ன் படம்.

புங்குடுதீவு மக்களது முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கும் தமிழரசுக்கட்சி பிரமுகரும் பிரபல அரசியல் ஆய்வாளருமான வி.ரி.தமிழ்மாறனை விடுவிக்க பேச்சுக்கள் தொடர்கின்றன.வடபிராந்திய பொலிஸ்மா அதிபரது வாகனத்தினுள் சிக்குண்டுள்ள அவரை மீட்டெடுக்க கடந்த நாலுமணி நேரமாக பேச்சுக்கள் தொடர்கின்ற போதும் அது வெற்றி பெற்றிருக்கவில்லைஇது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் புங்குடுதீவில்
உயர்தர வகுப்பு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக்கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவரென தெரிவத்து சுவிஸிலிருந்து வருகை தந்திருந்த மகாலிங்கம் சிவகுமார் என்பவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டிருந்தார். இவர் மின்கம்பத்தினில் கட்டிவைத்து தாக்கப்பட்ட நிலையினில் அங்கு வேறுசிலருடன் வருகை தந்திருந்த தமிழரசுக்கட்சி பிரமுகரும் பிரபல அரசியல் ஆய்வாளருமான வி.ரி.தமிழ்மாறன் குறித்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைப்பதாக கூறி தம்வசம் பொறுப்பேற்றிருந்தார்.கூட வந்திருந்தவர்கள் தம்மை நாலாம் மாடி குற்றப்புலனாய்வு தலைமையகத்தை சேர்ந்தவர்களென அடையாளப்படுத்தியிருந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையினில் புங்குடுதீவினில் இயல்பு நிலையினை ஏற்படுத்துவது தொடர்பினில் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் மாவை.சேனாதிராசா, வி.ரி.தமிழ்மாறன் ஆகியோர் பங்கெடுக்கும் கூட்டமொன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பெருமளவிலான புங்குடுதீவ பொதுமக்கள் இக்கூட்டத்தினில் கலந்து கொண்டிருந்தனர். கூட்டம் நடந்து கொண்டிருந்த வேளை அங்கிருந்தவர்கள் சிலருக்கு வந்திருந்த தொலைபேசி அழைப்பினில் குறித்த சுவிஸ் நபர் வெளிநாட்டிற்கு தப்பித்து செல்ல முற்பட்டுள்ளதாகவும் வெள்ளவத்தையினில் அவரைகண்டு தாம் தாக்கிய போது தப்பித்து ஓடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்