பக்கங்கள்

பக்கங்கள்

1 ஆக., 2015

பிறப்பு சான்றிதழ் மோசடி,விமல் வீரவன்ச குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் 10 வருடத்திற்கு தண்டனை


போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து, அரசாங்க கடிதம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மோசடி, அது தவறு என தெரிந்தும் அக்கடிதத்தை பயனபடுத்தியமை தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச மற்றும் அவரது மனைவி எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
குற்ற புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளை நிறைவு செய்து விசாரணை அறிக்கைகள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 1979 இலக்கம் 15 குற்றவியல் வழக்கிற்கமைய 454, 455,456,462 என்ற பிரிகளின் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் 10 வருடத்திற்கும் அதிக காலம் சிறை தண்டனை வழங்கப்படும்.
குற்றவியல் வழக்கு சட்டத்திற்கமைய இக்குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டால் பிணை வழங்க முடியாது, எனினும் சஷி வீரவன்சவை கைது செய்து பிணை வழங்கியமை ஆச்சரியமான ஒரு விடயமாகும். 
எப்படியிருப்பினும், இதுவரையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசாரணை நடவடிக்கைகளை உத்தியோக பூர்வமாக மேற்கொண்டு வழக்கு தொடுப்பதற்காக பல ஆவணங்கள் தயாராகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது