பக்கங்கள்

பக்கங்கள்

14 அக்., 2015

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில்கொழும்புத்துறை கோ. கோபிநாத் மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்


அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவர் மூன்றாம் நாளான இன்று காலையில் மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த கைதி, அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை மணியம் தோட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஸ்ணன் கோபிநாத் என்ற 26 வயதான நபரே மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய தமிழ் அரசியல் கைதிக்களும் கூட தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.