பக்கங்கள்

பக்கங்கள்

8 நவ., 2015


243 தொகுதிகளில் 5 கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. 

இந்த தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மகா கூட்டணிக்கும், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

இதில் தற்போதைய நிலவரப்படி நிதிஷ்குமார், லாலு பிரசாத்-காங்கிரஸ் கூட்டணி 157 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 76 இடங்களில் முன்னிலையில் உள்ளன. 

ஓட்டு எண்ணிக்கையில் நிதீஷ் குமார் - காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் உள்ளதால், இந்த வெற்றியை ஐக்கிய ஜனதா தள கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

பீகார் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக நிதிஷ்குமாருக்கு, டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிவசேனாவும் பாராட்டு தெரிவித்துள்ளது.