பக்கங்கள்

பக்கங்கள்

8 நவ., 2015

பிரதமரைத் தோற்கடிக்க புதிய முயற்சிகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வெளியேற்றி இந்த அரசாங்கத்தை நிராகரித்து புதிய ஐ.தே.க, ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் கொண்ட தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தும் சூழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5ம் திகதி தினேஸ் குணவர்த்தன தலைமையில் இதுதொடர்பான கூட்டம் ஒன்று நடந்துள்ளது. விசேடமாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களில் 90 வீதமானவர்கள் பிரதமர் மற்றும் தேசிய அரசாங்கம் மீது விரக்தியில் இருப்பதால் தினேஸ் குணவர்த்தனவின் திட்டம் நிறைவேறும் சாத்தியம் உள்ளது. அதில் ஐ.தே.க முக்கிய தலைவர்கள் சிலர் இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய கட்சி ஆரம்பித்து இதனை முன்னெடுப்பதைவிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து இதனை செய்வது சிறந்ததென அவர் கருதுகிறார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கு முன் அரசாங்கத்தை மாற்றி கூட்டாக தேர்தலை வெற்றிகொள்ள இவர்கள் முயற்சிக்கிறனர்.
விமல் வீரவன்சவின் வழியில் செல்லாமல் இருக்கவும் மஹிந்தவின் உதவியை இதற்குப் பெறுவதும் ரஞ்சித் டி சொய்சாவின் ஆலோசனையாகும். ஆனால் அரசாங்கத்தை கவிழ்த்தால் அடுத்து யாரை பிரதமராக்குவது என்ற குழப்பம் தினேஸ், விமல், வாசு ஆகியோரிடையே தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.