பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2015

யாழ்ப்பாணம் இயல்பு நிலைக்குத் திரும்புமா? கனமழைக்கு முடங்குமா?

கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக பெரும் பாதிப்பினை எதிர்நோக்கிய யாழ்.மாவட்டம் இன்று காலை இயல்பு நிலைக்கு திரும்பியது.எனினும் மீண்டும் கனமழைக்கு முடங்கும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றது.

குறித்த கனமழை காரணமாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.குறிப்பாக போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.இன்று காலையாழ்ப்பாணம் மீளவும் இயலபு நிலைக்கு திரும்பி மீண்டும் கனமழை ஏற்படும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றது.

மேலும் திருமலைக்கு அண்மையாக மையங்கொண்டிருந்த தாழமுக்கம் நேற்று நள்ளிரவுடன் யாழ்ப்பாணத்தைக் கடந்துவிட்டதாகத் திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலையம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.