பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2015

கைதிகளின் விடுதலைக்காக விரைந்து செயற்படும் த.தே.கூ

கைதிகளின் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையை எட்டியும் அரச தரப்பிலிருந்து இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் கைதிகளுக்கு உயிராபத்து ஏற்படும் என்ற அச்சநிலை காரணமாக வடக்கு முதல்வருடன் இணைந்து யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் சயந்தன் ஆகியோர் கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் ஆராய்ந்தனர்.

அரசியல் கைதிகளின் உடல்நிலை குறித்த நிலையினை அரசிற்கு தெரிவிப்பதுடன் அவர்களின் கோரிக்கை தொடர்பில் முடிவினை அறிவிக்க வேண்டிய அவசரத்தினையும் வலியுறுத்தும் நோக்கோடு அலரி மாளிகையில் ஜனாதிபதி - பிரதமர் தலைமையிலான விசேட கூட்டத்திற்கு விரைந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.