பக்கங்கள்

பக்கங்கள்

7 நவ., 2015

வைகோவின் தாயார் உடலுக்கு கனிமொழி அஞ்சலி


மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் இன்று (6.11.2015) காலை 9.05 மணிக்கு திருநெல்வேலியில் இயற்கை எய்தினார். அன்னாருக்கு வயது 98.
நுரையீரல் சளியால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக நேற்று மாலை தனியார்    மருத்து வமனையில் சேர்க்கப்பட்ட அவர், இன்று காலை ஏழு மணி வரையிலும் நல்ல நினைவுடன் இருந்தார்.  திடீரென, காலை 9.05 மணி அளவில் அமைதியாக அவர் உயிர் பிரிந்தது.  அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கலிங்கப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று கனிமொழி நேரில் சென்று, மாரியம்மாள் உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்