பக்கங்கள்

பக்கங்கள்

7 நவ., 2015

வைகோ தாயாருக்கு அஞ்சலி செலுத்த ஒரே விமானத்தில் பயணம் செய்த தமிழக தலைவர்கள்


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் 97 வயது தாயார் மாரியம்மாள் வெள்ளிக்கிழமை காலை மரணம் அடைந்தார். அவரது உடல்
இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

வைகோவின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் இன்று காலை மதுரைக்கு பயணம் செய்தனர். அங்கிருந்து அவர்கள் தனித்தனியே வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு காரில் சென்றனர். 

ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர், ஐ.பெரியசாமி, தமிழரசி, பூங்கோதை உள்ளிட்டவர்கள் சென்றனர்.