பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2015

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் தண்ணீர்: விமானங்கள் தாமதம்



வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலைய ஓடு பாதை பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் டெல்லி, மும்பை, கொல்கத்தா, மற்றும் துபாய், சிங்கப்பூர் புறப்படும் 15 உள்நாடு, வெளிநாடு விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கிறது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். இதேபோல் சென்னை வரும் விமானங்களும் வானிலை காரணமாக தாமதமாக வருகின்றன.

விமான ஓடு பாதையில் உள்ள தண்ணீரை ஊழியர்கள் வெளியேற்றி வருகின்றனர்.