பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2015

பொருளாதார காரணங்களுக்காக வடக்கு கிழக்கை இணைக்க அவசியம் இல்லை: இலங்கை அரசாங்கம்


பொருளாதார காரணங்களுக்காக வடக்கு கிழக்கு இணைப்பு என்ற திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை கோடிட்டு இந்த செய்தியை இந்திய செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது.
செலவுகளை குறைப்பதை நோக்காகக் கொண்டு இந்த விடயம் மேற்கொள்ளப்படக்கூடாது என்பதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், பௌதீக ரீதியாக மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இனங்களையும் மதங்களையும் ஒன்றுபட வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது இது அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியில் வடக்கு 4 வீதத்தையும் கிழக்கு 6 வீதத்தையும் கொண்டிருக்கின்றன.
இதேவேளை எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலையில் வடக்கு கிழக்குக்காக உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு ஒன்றை நடத்த உத்தேசித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், இதில் பங்கேற்க ஜப்பான் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்