கனமழை தமிழகத்தை தத்தளிப்பான சூழலுக்கு தள்ளியிருந்தாலும் மக்களின் மனிதநேயம் அந்த மழையில் மூழ்கிவிடாமல் உயர்ந்து நிற்கிறது.
பாதிக்கப்பட்ட இடங்களில் அரசுக்கு நிகராக தனி மனிதர்களும் தனியார் அமைப்புகளும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார்கள்.
ஊரப்பாக்கத்தில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் அங்கிருந்து வெளியேறி மருத்துவ உதவி பெற முடியாமல் சிக்கி தவித்த சித்ரா என்னும் கர்ப்பிணியை முகமது யூனுஸ் என்ற தன்னார்வலர் ஒருவர் காப்பாற்றியிருக்கிறார்.
சித்ரா தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, நன்றியின் வெளிப்பாடாக அந்த இளைஞரின் பெயரையே சூட்டியிருக்கிறார். சித்ரா - சந்துரு தம்பதி.
இதனை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முகமது யூனுஸ். |