பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2016

’’வயிற்றை பட்டினி போட்டு டயட்டில் இருக்க மாட்டேன்’’ சானியா

images (1)
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உடற்பயிற்சி செய்வதுபோன்ற ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
 டென்னிஸில் சுவிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸூடன் ஜோடி சேர்ந்து கலக்கி வரும் சானியா மிர்சா, எப்போதும் தனது வயிற்றை பட்டினி போட்டு டயட்டில் இருக்க விரும்ப மாட்டார்.
எப்போதும் தனக்கு பிடித்து உணவுகளை அளவுக்கு அதிகமாகவே விரும்பி உண்பாராம். அதிலும், ஐதராபாத்தில் இருந்தால் பிரியாணியை ஒரு கை பார்த்து விடுவார். ஆனால் அதற்கு ஏற்றார்போல் உடற்பயிற்சி செய்து அதை ஈடுகட்டி விடுவார்.அதனாலே அவர் இன்னும் ஸ்லிம்மாக இருக்கிறார். டென்னிஸ் களத்தில் ஓடி ஆடி பட்டையை கிளப்பமுடிகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் அவர் உடற்பயிற்சி செய்கையில் எடுத்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.