பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2016

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்? குஷ்பு



கட்சி மேலிடம் அனுமதித்தால் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் ஆர்.கே.நகர் இடம்பெறவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு சென்னை ஆர்.கே.நகர் தொகுதியை ஒதுக்குவது என்றும், அந்த தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து குஷ்பு போட்டியிட வாய்ப்பு உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இன்று காலை சென்னை வந்துள்ள காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இதுதொடர்பாக திமுக தலைவர் கலைஞரை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது ஆர்.கே.நகரை தங்களுக்கு ஒதுக்குமாறு காங்கிரஸ் கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே கட்சி மேலிடம் அனுமதித்தால் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார் என்று குஷ்பு கூறியுள்ளார்.