பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2016

4 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

 முதல்வர் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் திங்கள்கிழமை பதவியேற்றனர். இந்த நிலையில், 4 பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அமைச்சரவையில் உள்ளோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இதில், காதி கிராமத் தொழில்கள் துறை அமைச்சராக ஜி.பாஸ்கரனும், இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சராக சேவூர் எஸ்.ராமச்சந்திரனும், தொழிலாளர் நலத் துறை அமைச்சராக நிலோபர் கபிலும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக பி.பாலகிருஷ்ணா ரெட்டியும் புதன்கிழமை பதவியேற்க உள்ளனர்.

 சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.