பக்கங்கள்

பக்கங்கள்

21 அக்., 2016

உயிரிழந்த மாணவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் - மாவை

யாழில் துப்பாக்கிச்சூட்டில் பலியாகிய மாணவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என மாவை சேனாதிராஜா அறிக்கை ஒன்றின் மூலம்  

தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில், “யாழ்.பல்கலைக்கழக மாணவர் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய செய்தி எமக்கு பேரதிர்ச்சியை தந்திருக்கிறது. நான் யாழ்.மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களுடனும், அங்கு குவிந்திருந்த மாணவரிடமும் பேசி விசாரித்திருந்தேன். குற்றமிழைத்தவர்கள், கொலைக்குக் காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாணவர்கள் வற்புறுத்தினார்கள். நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி வழங்கினேன்.
மாணவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய ஏதுக்கள் எதுமில்லை. பொலிஸாரின் செயலை கடுமையாக கண்டிக்கின்றோம். இத்தகைய செய ல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும். எதிர்க்க வேண்டும். பல்கலை மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மாணவர்கள் கொலைக்கு நம்பகத்தன்மை வாய்ந்த சட்டபூர்வமான விசாரணை நடத்தப்பட வேண்டும்”. என மாவை சேனாதிராஜா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்உயிரிழந்த மாணவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் - மாவை