பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2019

4000 சிங்கள பெண்களுக்கு கருக்கலைப்பு? வைத்தியர் கைது

குருணாகல் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

42 வயதுடைய வைத்தியர் சேகு சியாப்தீன் என்பவரே நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் விசாரணைகளுக்காக இவர் கைது செய்யப்பட் டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் 4000 சிங்கள பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததாக சிங்களப் பத்திரிகையொயொன்று சர்ச்சைக்குரிய செய்தியொன்றை வெளியிட்டிருந்த நிலையில், குறித்த வைத்தியரை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது