பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2020

உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக நினைத்தால்!… சுவிசில் வசிப்பவர்களுக்கு ஓர் முக்கிய தகவல்

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக நினைத்தால் அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இதுவரையில் 25,107 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1,036 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக கருதினால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரணம் மற்றவர்களுக்கு பரவ நேரிடலாம் அல்லது மற்றவர்களிடமிருந்து உங்களுக்கு தொற்றிக் கொள்ளலாம்.

அதற்கு மாறாக அரசாங்கத்தின் 24 மணிநேர சேவையை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு மாகாணத்திற்கும் தொலைப்பேசி அழைப்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவரம் தெரிந்து கொள்ள

இதுதவிர ஓன்லைனில் Coronavirus Check Up Process-யை மேற்கொள்ள வேண்டும், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜேர்மன் மற்றும் இத்தாலி மொழிகளில் வழங்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

இது முடிந்த பின்னர் நீங்கள் அடுத்ததாக செய்ய வேண்டியவை குறித்து அறிவிக்கப்படும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் உங்களை தொடர்பு கொள்வார்கள்.