பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
டி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் பாடி வருகிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சில பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.
வாழ்க்கைச் சுருக்கம் [தொகு]
சௌராட்டிரக் குடும்பத்தில் மதுரையில் மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாக்ப் பிறந்தவர் சௌந்தரராஜன். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.
T.M.செளந்தரராஜன் பாடிய சில பாடல்கள் :
டி. எம். சௌந்தரராஜன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற் பெயர் | டி. எம். சௌந்தரராஜன் |
பிறப்பு | மார்ச்சு 24, 1922(அகவை 91) |
பிறப்பிடம் | மதுரை, சென்னை மாகாணம்,பிரித்தானிய இந்தியா |
தொழில்(கள்) | பாடகர் |
பழம்பெரும் பின்னணிப்பாடகர்
டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்(வயது 91) இன்று மரணம் அடைந்தார். மூச்சித்தி ணறலால் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
1946 ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அவர் திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அவரது மறைவு குறித்த செய்தி அறிந்ததும் திரைத்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.