பக்கங்கள்

பக்கங்கள்

வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது 201.3 ஏக்கர் காணிகள், இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இன்று, காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதன்படி வலி.வடக்கில் உள்ள J-233, J-234, J-235, J-236, குரும்பசிட்டி (J-238), கட்டுவன் (J-242), மற்றும் வறுத்தலை விளான் (J-241) (J-238 )ஆகிய பகுதிகளில் உள்ள 201.3 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டன. பின்பு காங்கேசன்துறை புகையிரத நிலையம் மக்கள் பாவனைக்கு இன்று முதல் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், வடமாகாண ஆளுநர், முப்படைகளின் தளபதிகள், யாழ் அரச அசதிபர், யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்கள், விடுவிக்ப்படும் காணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து விலக பிரிட்டன் மக்கள் முடிவெடுத்துள்ள நிலையில் 27 நாடுகளை கொண்ட