பக்கங்கள்

பக்கங்கள்

T யாங்கூன், மியான்மர் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ள ஆங் சான் சூகியின் கட்சி, அந்நாட்டு தேர்தல் அமைப்பை கடுமையாக சாடியுள்ளது. தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் திட்டமிட்டே தாமதப்படுத்துவதாகவும், சூழ்ச்சி வேலைகளில் ஈடுபடும் நோக்கில் இது போன்று தேர்தல் அமைப்பு செயல்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் நடைபெறும் இந்த சுதந்திரமான தேர்தலில் ராணுவ ஆதரவு பெற்ற ஆளும் கட்சியான ஒற்றுமை கட்சிக்கும், ஆங்சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. 440 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபையில் 330 இடங்களுக்கும், 224 இடங்கள் கொண்ட மேல்சபையில் 168 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. மீதமுள்ள 25 சதவீத இடங்களை ராணுவமே நிரப்பிக்கொள்ளும்.பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் மாலையிலேயே தொடங்கியது. நேற்று பகல் நிலவரப்படி சுமார் 70 சதவீத இடங்களில் சூ கியின் கட்சியினரே முன்னிலையில் இருந்தனர். இறுதி நிலவரம் இன்று காலையில் தெரிய வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆங் சான் சூகி கட்சியான தேசிய ஜனநாயக லீக்கின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மத்திய தேர்தல் ஆணையம் வேண்டும் என்றே தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் தாமதப்படுத்தி வருகிறது. ஏனெனில், தேர்தல் ஆணையம் சூழ்ச்சி வேலைகளில் அல்லது வேறு சில திட்டங்களுடன் இருக்கலாம்” என்று தெரிவித்தார். 664 பாராளுமன்ற உறுப்பினர்கள கொண்ட இந்த தேர்தலில் இதுவரை 50 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனிடையே 75 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் ஆங் சான் சூகியின் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக பிபிசி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது

மியான்மர் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ள ஆங் சான் சூகியின் கட்சி,

ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்கு பிரதமர் தலைமையில் குழு [ செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2015, 08:24.37 AM GMT ] ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரதமர் தலைமையிலான இந்த குழுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான மங்கள சமரவீர. டி.எம்.சுவாமிநாதன், விஜேதாஸ ராஜபக்ச மற்றும் மனோ கணேசன் ஆகியோர் உள்ளடக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.