பக்கங்கள்

பக்கங்கள்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் யாழ். உதயன் பத்திரிகைக்குச் சென்று அங்கு உதயன் குழுமத்தின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவனை சந்தித்தார். குறித்த சந்திப்பின் போது கடந்த காலத்தில் உதயன் பத்திரிகைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், மற்றும் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளையும் பார்வையிட்டார் சமந்தா பவர். அதன்பின்னர் உதயன் குழுமத் தலைவர் ஈ.சரவணபவனை சந்தித்துக் கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலின் போது சமந்தா பவர் கருத்து தெரிவிக்கையில், நானும் ஒரு ஊடகவியலாளர் தான். அரச வலுப்படுத்துவதில் பத்திரிகையில் உள்ள ஒவ்வொருவரும் முக்கிய பங்காற்றுகின்றீர்கள். கடந்த காலங்களில் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை நான் அறிவேன். உங்களுடைய தைரியத்தை கண்டு வியப்படைகிறேன். கடந்த காலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறுவதை உறுதி செய்ய வேண்டும். நான் ஒரு அரசை விமர்சிப்பதோ, அல்லது அரசு பக்கம் இருந்து கொண்டு விமர்சனங்களை எதிர்கொள்வதோ இரண்டுமே முக்கியம். அரச அதிகாரிகளுக்கு தெரியாத விடயங்கள் கூட நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். நீங்கள் குமிழ்களை உடைப்பவராகவும் மக்களின் உரிமைக்காக போராடுபவர்களாகவும் இருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல எங்களுடைய நாட்டில் பத்திரிகைத்துறை மிகவும் கடினம் ஆனால் அங்கு பாதுகாப்பு உண்டு. ஆனால் இங்கு பாதுகாப்பு பிரச்சினை இருந்தும் தொடர்ந்தும் மக்களுக்காக குரல் கொடுக்கிறீர்கள்.நீங்கள் செய்த தியாகம் அளப்பெரியது. இதனை நினைத்து நான் இன்னமும் வியப்படைகிறேன் என்றார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துக்களுக்குத் தலையாட்டும் பொம்மை எதிர்க்கட்சித் தலைவர் எமக்கு தேவையில்லை. அதன் காரணமாகவே நாங்கள் தனி