சிறையில் ஏன் ஜெயலலிதா சீருட்சை அணியவில்லை புதிய சர்ச்சை
சட்டத்தின் முன் அனைவரும் சமம். தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால், கர்நாடக சிறைத் துறை மட்டும் இதற்கு விதிவிலக்கானது. சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு அவர் கைதி என்பதையே மறந்து சலுகைகளை அள்ளித் தந்திருக்கிறது. இது எதற்காக?' என்று விளக்கம் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பி பதிலும் வாங்கியிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நரசிம்மமூர்த்தி.

பெங்களூரில் இருந்த அவரை சந்தித்தோம். ''பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவுக்காக வெஸ்டன் டாய்லெட், ஏ.சி மற்றும் வெளியிலிருந்து உணவு முதலியன தரப்பட்டன என ஊடகங்களில் தகவல்கள் வந்தன. ஆனால், இதையெல்லாம் மறுத்து அறிக்கைவிட்டார் சிறைத் துறை அதிகாரி ஜெயசிம்ஹா. அதனால் என்னைப் போன்ற வெகுஜன மக்களுக்கு யார் சொல்வதை நம்புவது என்று புரிந்துகொள்ள முடியாததால், நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஐந்து கேள்விகள் கேட்டிருந்தேன். அதற்கு, கடந்த வாரம் கர்நாடக சிறைத் துறை பதில்கள் அனுப்பியது.
1. நீதிமன்றம் தண்டனை விதித்த பிறகு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் ஜெயலலிதாவை அடைத்த தேதி, நேரம் என்ன?
பதில்: 27.9.2014 மாலை 6:00. கைதி நம்பர்: 7402.
2. சிறைக்குள் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்னென்ன?