ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள ஐ படத்தில் நடிக்க சியான் விக்ரம் ரூ.15 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது
தாண்டவம் படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கரின் ஐ படத்தில் சியான் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சீனாவில் நடைபெற உள்ளது. அதற்காக படக்குழுவினர் அனைவரும் தயாராகி வருகின்றார்கள்.
இந்நிலையில் சியானின் சம்பளம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சியான் விக்ரம் ஐ படத்தில் நடிக்க ரூ. 15 கோடி வாங்குகின்றார்.
விஜய்- அஜித் இருவரும் ஏற்கனவே இந்த சம்பளத்தை தாண்டி விட்டார்கள். ஆனால் தற்போதுதான் விக்ரம் இந்த சம்பளத்திற்கு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ படத்தின் மூலம் சியானும் ஷங்கரும் இரண்டாவது முறையாக பணியாற்ற உள்ளனர்.