புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014

பாலசுப்பிரமணியர் கோவில்


வரலாறு

ஆக்கம்-சிவ -சந்திரபாலன் சுவிட்சர்லாந்து (புங்குடுதீவு 8)
_________________


சின்ன நல்லூர் என்று செல்லமாக அழைக்கப்படும் புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் ஆரம்ப காலத்தில் நாச்சிமார் கோவில் என்றே அழைக்கப்பட்டது. புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவெளி.இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் வலது புறம் நெடுகிலும் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களின் நடுவே கிழக்கு நோக்கி சிங்காரமாய் கோலோச்சும் முருகப்பெருமானின் அழகுமிகு திருத்தலம் காட்சியளிக்கும் .கம்பீரமாய் எழுந்து நிற்கும் சிற்பத் தேர் முட்டியின் பின்னே பனங்கூடலின் பின்னணியில் அருள் புரியும் பாலசுப்பிர மணியர் எழுந்தருளி இருக்கிறார்                                                                                   .                             இளந்தாரி    நாச்சிமார் 

கோவில் என்ற தொன்மை பெயரை கொண்ட இவ்வாலயம் சுமார் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும் . நானூறு ஆண்டுகளுக்கு முன்னே வள்ளி நாச்சியார் அயல் கிராமத்தில் இருந்து மடத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவரை திருமணம்  செய்தார் .மணமகளான நாச்சியார் மணமகன் வீட்டில்  மூன்று நாள் தங்கி வழமைப்படி இருந்தார் .மூன்றாம் நாள் காலை  நாச்சியார் முன் புறம் உள்ள வயலில் இறங்கிய போது வயலின் உரிமையாளர் ´´நீர் புகுந்த  வீடு எம்மோடு சேர்ந்து வாழும் தகுதி அற்றது .என்று ஏளனம் செய்தார்.இதனை கேட்டு கவலையுற்ற நாச்சியார் அதே இடத்திலேயே தனது தாலிய கழற்றி அந்த வயல் வரம்பில் ஒரு கல்லின் மீது வைத்து சிரட்டையால் மூடி விட்டு தனது பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார் . இதனை கண்ட இவரது கணவர் அன்று முதல் அதே இடத்தில அந்த கல்லை வைத்து ஒரு கோவிலை உருவாக்கி வழிபட்டு தானும் மறுமணம் செய்து வாழ்ந்து வந்தார் .வள்ளி நாச்சியார் தனது பிறந்த ஊருக்கு சென்று அங்கே உள்ள இழுப்பண்ணை  என்னும் இடத்தில் ஒரு ஆலயத்தை வைத்து வழிபட்டார் அந்த ஆலயம் வல்லன் இழுப்பண்ணை நாச்சிமார் கோவில் என் இப்போதும் அழைக்கப் படுகின்றது                                                                                                                                                       .                                                                                                                                                  மடத்துவெளி நாச்சிமார் கோவிலின் தெற்கில் ஒரு அரசமரம் நின்றது அங்கே ஒரு பாம்பு ஒன்று வாழ்ந்து வந்ததாகவும் கூறப் படுகின்றது .இந்த அரச மரத்தின் வேரானது நீளமாக பக்கத்தில் இருந்த சுண்ணாம்பினால் ஆனா மடப்பள்ளி அடிப்பக்கம் வரை ஒரு மனித கை கால் உருவில் படர்ந்திருந்ததகவும் வரலாறு கூறுகிறது .
இவ்வாலயம் 1960 ஆண்டு காலத்தில் புனரமைக்கப் பட்டு அதன் உரிமையாளராக திரு வேலுப்பிள்ளை சபாபதி இருந்து வந்தார் .இவரது வறுமை காரணமாக தொடர்ந்து இவ்வாலயத்தை வர்த்தகர் வி.அருணாசலம் பொறுப்பேற்ற பின்னர் முற்று முழுதாக ஆலயம் புனரமைக்கப்பட்டது .கருவற்றின் உள்ளே வேலாயுதமும் வடமேற்கு மூலையில் நாச்சியாரின் விக்கிரகமும் பிரதிஸ்டை செய்யப்பட்டு ஆலயத்தின் பெயரும் பாலசுப்ரமணியர் கோவில் என்றும் மற்றப் பட்டது.                                                                          


சின்ன    நல்லூர் என்று செல்லமாக அழைக்கப் படும் இந்த ஆலயத்தில் நல்லூர் ஆலயம் போன்றே சரியான நேரத்தில் பூஜை நடைபெற்று வருகிறது.அத்தோடு இவ்வாலயத்தின் திருவிழாக்கள் மிக கட்டுப் பாட்டுடன்  முறையான சைவ விதிமுறைக்கு ஏற்ப நடைபெறுவது வழக்கம் .திருவிழா தினமும் பகலும் இரவும் பன்னிரண்டு மணிக்கே முற்றாக முடிவுறும் அத்தோடு சமய கொள்கைகளுக்கு உட்படாத சினிமா பாடல்களை கொண்ட நிகழ்சிகள் கேளிக்கை வேடிக்கை நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்ட நிலையிலேயே திருவிழா நடைபெறும் .திரு அருணாசலத்தை தொடர்ந்து வர்த்தகர் வி.இராமநாதன் பொறுபேற்றார் .இவரது முயற்சியில் இவ்வாலயத்தில் எழுபதுகளின்  ஆரம்பத்தில் புன்குடுதீவிலேயே முதன் முதலாக முறையான முற்றிலும் சித்திர வேலைபாட்டில்  முடி வரை அமையபெற்ற நல்லோர் ஆலயத் தேரை ஒத்ததான சித்திரத் தேர் வீதியுலா வந்த பெருமை பெற்றது  .அத்தோடு புங்குடுதீவில் நுழைந்ததுமே பார்போரை வசீகரிக்கும் அழகான தேர்முட்டியும் அமைக்கப் பட்டது.மடத்துவெளி பிரபல வர்ததகர் அண்ணாமலை மாணிக்கம் அவர்கள் தனது மனைவி நினைவாக ஒரு அன்னதான மண்டபத்தை அமைத்து கொடுத்துள்ளார் .திருவிழாக் காலத்தில் இங்கே அன்னதானம் நடைபெறும் .இந்த பணியை சிறப்பாக மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் தொடர்ந்து செய்து வந்தனர் .1987 முதல் இந்த அன்னதான பணியை அமுதகலசம் என்னும் நாமமிட்டு தமது சொந்த பொறுப்பில் நடத்தி சிறப்பித்தனர் .வர்த்தகர் பா.பாலசுந்தரம் தாகசாந்தி நிலையத்தை திருவிழாக் காலங்களில் நடாத்தி வருகிறார் .




இவ்வாலயத்தின் கொடியேற்றம  எட்டம் திருவிழா பூங்காவனம் தீர்த்தம் உட்பட சிறப்பான சித்திரதேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும் அன்றைய தின பச்சை சாத்தும் காட்சி கண் கொள்ளா வகையில் கணக் கூடியதாகவிருக்கும் .மேலும் சூரன்போர் வாழை வெட்டு கந்தசஸ்டி திருவெம்பாவை போன்ற விழாக்களும் மிக சிறப்பானதாக இருக்கும் திருவெம்பாவை அதிகாலை 4 மணிக்கு ஆரம்ப மணியோசையுடன் தொடக்கி திருப்பள்ளி எழுச்சி படி துயில் எழுப்புதல் மங்கள வதியகசேரி கூட்டு வழிபாடு என வரிசையாக நடைபெட்டு காலை ஆறரைக்கு முடிவுறுதல் வரலாற்றுபதிவாகும்.இதே காலத்தில் கூட்டு வழிபாட்டு மன்றத்தினர் அதிகாலையிலேயே சங்கு சேமக்கலம் சகிதம் கிராமந்தோறும் பள்ளி எழுப்பும் தொன்மை வாய்ந்த நிகழ்வை மேற்கொள்வர்.
இவ்வாலயத்தின் கூட்டு வழிபாடு மன்றம் தீவுப்பகுதியில் மிக சிறப்பு பெற்றது.இந்த பணியை பொறுப்பாக நான்கு தசாப்தமாக நடத்தி வந்த பெருமை உள்ளோர் வர்த்தகரான கநதையா அம்பலவானரையே சாரும் ,இவரது நிர்வகிப்பில் சீதாதேவி மகன். (பெயர் பின்னர் சேர்க்கப்படும )சீவரத்தினம் வே பாலசுரமணியம் நா.விநாயகமூர்த்தி ந.சண்முகநாதன் ந.சோமசுந்தரம் சி.பேரின்பநாதன் ,அ.தியாகலிங்கம்,இ.ஞானசேகரம் .சிவ-சந்திரபாலன் ,அ.சிவகுமார் ,அ,திருவருட்செலவன் ,இ.பாலகுகன் ,க.ரவீந்திரன் ,கு.கிருபானந்த,சே.இந்திராதேவி ம.கமலரனஞ்ஜினி ,சே.தனலட்சுமி வி பத்மினி இ திருக்கேதீச்வரி க.அருந்தவநாதன் .நா.செல்வநாயகி நா.சவுந்தரநாயகி.கி.சசிமாலா ,த.சகுந்தலாதேவி ப.யோகேஸ்வரன் பா .கைலயநாயகி போன்றோர் மிகவும் தரமான சீரான கூட்டு வழிபட்டு முறையை திறம்பட நடத்தி வந்தனர்.


இவ்வாலயத்தின் நிர்வாகப் பணிகளில் வே.சபாபதி வி.அருணாசலம் .வி.இராமநாதன் அ.பா.பாலசுப்ரமணியம் இ.குலசேகரம்பிள்ளை க.தியாகராசா வி.சுப்பிரமணியம் பொ.நாகேசு க.அம்பலவாணர் க.நாகநாதி கு கதிர்காமு கோ .நாகேசு பரராசசிங்கம் கி.சவுந்தரநாயகி வே.இளையதம்பி அ.இளையதம்பி நடராசா க.வீரசிங்கம் பா.பாலசுந்தரம் து.ரவீந்திரன்.அ.சண்முகநாதன் ந.தர்மபாலன் வே.சுப்பிரமணியம் கு.கிருபானந்தன் ஆகியோர் சிறப்பாகக் கடமை ஆற்றியிருந்தனர் .
1991 காலப்  பகுதியில் இராணுவம் உட்புக பெரும்பாலான மக்கள் இடம்பெயர ஆலயம் பொலிவிழந்து போனது .பின்னர் சோ.சிவலிங்கம் தலைவராகவும் கு.கிருபானந்தன் செயலாளராகவும் கி.சவுந்தரநாயகி பொருளாளராகவும் கொண்ட புதிய பரிபாலன சபையும் உருவாகியது.பின் வந்த காலங்களில் தம்பிபிள்ளை என்பவர் தானே தனித்து ஆலயத்தை துப்பரவு செய்து தினமும் விளக்கேற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது 2002 முதல் மீண்டு நித்தியா நைவேத்திய கிரியைகள் நடைபெற்று வருகின்றன.அண்மைக்காலமாக இந்த ஆலயத்தினை மீள்நிர்மானம் செய்து ராஜகோபுரததினை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் வி.இராமநாதன் அவர்கள் முருகனடி சேர்ந்தமை துரதிர்ஷ்டமானது கனடாவில் இருந்து தாயகம் திருபியுள்ள சமூக சேவகர் எ.சண்முகநாதன் தலைமையில் 2012 இல் புதிய நிர்வாக சபை அமைக்கப் பட்டு தற்போது சீரான செயல்பாட்டில் இந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யபட்டுள்ளது .26 ஜூன் 2013 அன்று புனருத்தாரணம் செய்யபட்ட ஆலயத்துக்கும் புதிதாக கட்டபட்ட ராஜகொபுரதுக்குமான கும்ம்பாபிசெகம் இடம்பெறுகிறது .பொதுச்சேவையில் வரலாறு களை பாதிக்கும் மடத்துவெளி இளைஞர் தலைமுறை உலகெங்கும் பரவி வாழும் காரணத்தால் இனிவரும்காலங்களில் இவ்வாலயம் மேலும் சிறப்பு பெறும் என நம்புவோமாக 

ad

ad