புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014

புங்குடுதீவின் வரலாறு


புங்குடுதீவின் வரலாறு

இலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவு பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது.
பெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது. இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது.
1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி பொ. ரகுபதி, காரைநகரிலுள்ள களபூமியில் பெருங்கற்பண்பாட்டுச் சின்னங்கள் சிலவற்றகை; கண்டு பிடித்தார்.
இத்தகைய சின்னங்கள் புங்குடுதீவின் வடபகுதியில் உள்ள ஊரைதீவிலும் காணப்படுகின்றன.
இங்கு வட்டக்கற்களாலான சிறு கிணறுகள் தென்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஊரைதீவிலுள்ள ஐயனார் ஆலயம் பழமை வாய்ந்தது. இது இப்பொழுது சிவாலயமாக மாறிவிட்டது. இவ்வாலயத்திலுள்ள கருங்கற் து}ண், லிங்கம் என்பன வளர்வதாக கூறப்படுகிறது. இவ்வாலயத்துக்கு வடக்கே உள்ள கடற்கரையில் வட்டக்கற்களினாலான இரண்டு கிணறுகள் இருக்கின்றன.
சேர சோழ பாண்டிய மண்டலங்களோடு ஈடமண்டலமும் ஒன்றாகும். சேர சோழ பாண்டிய மண்டலங்களிலிருந்தும் சனங்கள் ஈழமண்டலத்தில் குடியேறினர், என்று யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நு}லில் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதியுள்ளார்.
காலத்துக்குக் காலம் தென்னிந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் மக்கள் தீவுப்பகுதிகளில் குடியேறினர். தென்னிந்திய மக்களின் வழித்தோன்றல்கள் பற்றி காலத்துக்குக் காலம் பதிவுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
தனிநாயக முதலி பரம்பரையினரை உதாரணமாகக் கொள்ளலாம். புங்குடுதீவு உட்பட ஏனைய தீவுகள் சர்வதேச வர்த்தக மையமாக இருந்தமைக்குப் பல சான்றுகள் உள்ளன. நெடுந்தீவில் பெருக்கு மரங்கள் காணப்படுகின்றன.
புங்குடுதீவின் பழைய துறைமுகமான புளியடித்துறைக்கு அருகிலும் பெருக்கு மரங்கள் காணப்பட்டன.
இம்மரங்கள் அரேபியரால் அறிமுகப்படுத்தப்பட்டன. எனவே அரேபியர் இத்தீவுகளுக்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபட்டனர் எனலாம்.
தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுவதால் புங்குடுதீவில் சோழகனோடை, சோழன்புலம், பல்லதீவு போன்ற இடப்பெயர்கள் அவர்களால் இடப்பட்டிருக்கலாம் எனக் கொள்ள இடமுண்டு.
தமிழகத்திலே (கி.பி. 9 ஆம் நு}ற்றாண்டு முதல் 12 ஆம் நு}ற்றாண்டு வரை) மேலாதிக்கம் பெற்ற சோழர் பெருமன்னர்கள் சுமார் ஒரு நு}ற்றாண்டிற்கு இலங்கையின் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.
இக்கால கட்டத்தில் இந்து சமயம் இங்கு மேலோங்கியிருந்தது எனலாம்.
தமிழ்நாட்டிலே ஆதிக்கம் பெற்ற இரண்டாவது பாண்டிய பேரரசு காலத்திலே அவர்களின் ஆதரவுடன் அவர்களின் தளபதிகளில் ஒருவன் ஆரியச்சக்கரவத்தி தலைமையில் யாழ்ப்பாணத்தில் தமிழரசு ஒன்றை உருவாக்கி கி.பி. 1250 முதல் பல ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
இக்காலப் பகுதியில் இந்தசமயச் செல்வாக்கு தீவகத்தில் மேலோங்கியது எனலாம்.
இதன் பின்பு போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆட்சி இலங்கையில் ஏற்பட்டது. முன்னைய அரசரின் ஆட்சிக்காலங்களிலும் இந்து சமயம் நலிவுற்றது.
பிரித்தானியர் காலத்தில் பொதுவாக சமய சுதந்திரம் நிலவியது எனலாம். ஆதி காலம் தொடக்கம் கிரேக்க உரோம, அராபிய, சீனத் தொடர்புகள் இலங்கையுடன் ஏற்பட்டது. இந்தியாவின் தமிழகம், கேரளம், ஆந்திரம், கன்னடம், கலிங்கம் மற்றும் வட இந்திய தொடர்புகளும் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான தொடர்புகள் ஏதோ வகையில் தீவகத்திலும் ஓரளவாவது நிலவி வந்தமைக்கு சில இடப்பெயர்கள் சான்று பகர்கின்றன.
பல்லதீவு, பல்லவன்புலம் போன்ற இடப்பெயர்கள் பல்லவத் தொடர்பையும் சோழன்புலம், சோழகனோடை போன்றவை சோழத் தொடர்புகளையும் மாறன்புலம், பாண்டியன் வளவு போன்றவை பாண்டியத் தொடர்பையும், கலிங்கன்புலம், கலிங்கராயன் வளவு போன்றன கலிங்கத் தொடர்பையும் செட்டிவளவு, செட்டியர் தோட்டம் என்பவை செட்டிகளின் தொடர்புகளையும் பணிக்கன்புலம், போன்றவை கேரளத் தொடர்பையும் சீனன்புலம், சாவகன் வளவு போன்றவை முறையே சீனத் தொடர்பையும் சாவகத் தொடர்பையும் காட்டுகின்றன.
புங்குடுதீவில் 90 சதவீதம் இந்துக்களே வாழுகின்றனர். தீவின் நடுப்பபுதியில் குறிப்பிட்டளவு கிறிஸ்தவர்களும் வாழுகின்றனர். பண்டைக்காலம் தொட்டு இந்தியாவின் தென்கோடியில் நெய்தல் நிலத்தில் வாழ்ந்து வந்த பரதவர்கள் 1534 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த போர்த்துக்கல் அரசனால் மதம் மாற்றப்பட்டு கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர்.
எனினும் கிறிஸ்தவ அறிவைப் போதியளவு கொண்டிராத நிலையில் வாழ்ந்து வந்தனர். இக்கால கட்டத்தில் புனித பிரான்ஸிஸ் சவேரியாரின் வருகையானது மிகப் பெரிய மாறுதலை பரதவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஊக்கத்தையும் உழைப்பையும் மையமாகக் கொண்டு செயலாற்றிய புனிதரின் சேவை மிகு போதகம், அவர்கள் வாழ்ந்து வந்த பாதையைச் சீர் செய்தது.
1545 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டத்தில் பரதவ கிறிஸ்தவர்களுக்குப் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன.
இதனால் இவர்கள் தமது தாயகத்தை விட்டு தப்பியோட முனைந்தனர். கொந்தளிக்கும் அலைகடலையும் குமுறிவரும் காற்றையும் துச்சமென மதித்து வெளியேறிய இச்சமூகத்தினர் இலங்கையின் வடபாலுள்ள பல தீவுகளில் குடியேறினர்.
இவர்களில் ஒரு பகுதியினர் புங்குடுதீவில் தென்கீழ் முனையிலும் இறங்கிக் குடியேறினர்.
சில காலம் செல்லத் தீவின் மத்திய பகுதியில் ஆலமரங்களும் பற்றைகள், புதர்களும் நிறைந்த இடத்தில் புனித சவேரியாரின் ஆலயத்தை அமைத்தனர். பின்பு அதன் சூழலில் வாழத் தொடங்கினர். இவ்வாறே புங்குடுதீவின் வேறு சில பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் வாழத் தொடங்கினர்.
அதனை புங்கு 10 உடுதீவு எனப்பிரித்து புங்கமரம் நிறைந்த தீவு எனப்பொருள் கூறலாம். புங்கமரம் நெய்தல் நிலத்துக் கருப்பொருள்களுள் ஒன்று எனப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை கூறியிருக்கிறார்.

ad

ad