புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014

சண்முகநாதன் மகா வித்தியாலயம்

புங்குடுதீவு சண்முகநாதன் மகா வித்தியாலயம்-சிவ-சந்திரபாலன் 
--------------------------------------------------------------------------------------------------
புங்குடுதீவு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த பாடசாலை வல்லன் மாவுதிடல்பகுதி மக்களின் ஏகோபித்த கல்வி சொத்துபோக்குவரத்து வசதிகுறைந்த இந்த பாடசாலைக்கு வந்துஆசிரியப் பணி செய்தவர்கள் போற்றப் பட வேண்டிய தெய்வங்கள் . இந்த பகுதி பெரியவரும் சைவைத்தொண்டருமான மார்க்கண்டு சோதிநாதர் தனது சொந்த காணியில் இந்த பாடசாலையை1925 ஆரம்பித்தார் . தொடர்ந்து சைவ வித்தியா அபிவிருத்திசங்கத்தினால் நடத்தப்படது



1970இல் பெற்றோர் கல்வி அமைச்சுடன் தொடர்பு கொண்டு இடப் பற்றாகுறையப் போக்குமுகமாக புதிய கட்டிடம் ஒன்றை கோரி இருந்தனர்.அதட்கினங்க புதிய கட்டிடம் ஒன்று அளவில் அமைத்து கொடுக்கப்பட்டது.இங்கு விஞ்ஞான கூடம் தொடங்கப்பட்டது.பாடசாலையின்சுற்றுமதிலை பழைய மாணவர் சங்கத்தினர் கட்டி கொடுத்து பெருமை சேர்த்தனர் .1972இல் ஆரம்பப் பாடசாலையாக இருந்து வந்த இந்தபாடசாலை தரம் உயர்த்தப்பட்டு உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.இதன் பின்னர் சண்முகநாதன் கனிஸ்ட மகா விதியலயமாக பெயர்மாற்றம்பெற்றது .17101991இல் புங்குடுதீவு மக்களின் இடப்பெயர்ச்சி காரணமாகஇப்பாடசாலை தொடர்ந்து இயங்காமல் இருக்கிறது.இடம்பெயர்ந்தமக்களின் கல்வி தேவை கருதி தென்மராட்சியில் இந்த பாடசாலைமுதல் வரை தற்காலிகமாக இயங்கியது அங்கே அதிபராக பணியாற்றிய செ.சண்முகவடிவு கிழலில் கடலில் துரதிர்டமாக அகால மரணமாக இப்பாடசாலை மேற்கொண்டு அங்கேயும் இயங்காமல் போனது.புங்குடுதீவின் ஐந்துபாடசாலைகள் மீண்டும் இயங்க தொடங்கினாலும் இந்த பாடசாலை தவிர்க்க முடியாத காரணங்களினால் இன்னும் திறக்கப் படவில்லை.அரசநிர்வாக நோக்கில் தேவையான மாணவர்கள் கணிசமான அளவில் இல்லாமையாலும் போக்குவரத்து வசதியின்மை காரணமாக ஆசிரியர்கள் தூரஇடங்களில் இருந்து வர முடியாத அல்லது விரும்பாத காரணத்தாலும் இந்த பகுதி மக்களின் கல்விசொத்து அப்படியே முடங்கி கிடப்பது கவலைஅளிப்பதாகும் .சுவிட்சர்லாந்தில் உள்ள இந்த பகுதி மக்கள் இந்த பாடசாலையை மீள அமைப்பதில் முயற்ற்சி செய்து வருவது குறிப்பிடத் தக்கது.
இந்த பாடசாலையில் இந்து இளைஞர் மன்றம் பழைய மாணவர் சங்கம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் என்பவற்றின் கூட்டு முயற்சியில் சிவாத்திரிநவராத்திரி விழாக்கள் கொண்டாடப் பட்டன.1973இல் நடைபெற்ற யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சங்கீத நடன நாடகப்போட்டிகளில் சாம்ராட் அசோகன் என்னும் நாடகம் இரண்டாம் இடத்தை பெற்றது .அதே ஆண்டில் காவலூர் பாடசாலைகளின் மெய் வல்லுநர்போட்டிகளில் 13 வயது பிரிவில் பெண்களுக்கான வெற்றிக்கிண்ணத்தை சுவீகரிதமையும் குறிப்பிடத் தக்கது
இப்பாடசாலையின் அதிபர்களாக லோரன்ஸ் சேதுபதி செல்லையா வை,கநதையா .கனகரத்தினம் பொன்னுத்துரை .சீவரத்தினம்மூ.நடராசா,நாகரத்தினம் ,,நடராசா,சண்முக வடிவு ஆகியோர் போக்குவரத்து சிரமத்தை பார்க்காமல் பெரும்  பணியாற்றியமை பாராட்டப்பட்டவேண்டிய விசயமாகும் .இந்த பாடசாலை யாழ்ப்பான இடம்பெயர்வின் பின்னர் இன்னமும் மீள் திறப்புச்  செய்யப்படவில்லை என்பது கவலைக்குரியது . இப்பகுதி  பெரிய அளவில் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யாத நிலையில் தான்  இந்த பாடசாலைக்கு இந்த வாய்ப்பு இன்னமும் கிடைக்கவில்லை .இந்த பாடசாலையின் கல்வி கற்ற புலம் பெயர் பழைய மாணவர்கள் இந்த கல்விசாலையை மீண்டும் திறந்து வைக்க பேரு முயற்சி எடுத்து வருகிறார்கள் 

ad

ad